இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வார்'. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து டைகர் ஷெராஃப்பும் ஆக்ஷனில் மிரட்டி உள்ளார். ஆதித்யா சோப்ரா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
அடேங்கப்பா ஒரு சண்டைக்காட்சிக்கு இத்தனை நாடா...! - வாணி கபூர்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான 'வார்' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி இயக்குநர் ஆனந்த் கூறுகையில், 'வார்’ திரைப்படம் இந்தியாவின் ஆக்ஷன் திரைப்படங்களில் மிக முக்கிய படமாக திகழும். ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் சண்டை காட்சிகளை படமாக்க ஏழு நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். அதில் ஆஸ்திரேலியா மிக முக்கியமாகும். சண்டைக்காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று அவர் தெரிவித்தார்.
இப்படத்தில், ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெராஃப்புடன் வாணி கபூர் நடித்துள்ளார். இரண்டு ஹீரோக்களுக்கு இடையே நடைபெறும் யுத்தமாக இந்த 'வார்' படம் உருவாகியுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வார் படம் ரிலீசாகிறது. இப்படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.