சோனாலி போஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, ஃபர்கான் அக்தர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ (The sky is pink). வருகிற அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வு செய்யப்பட்டது.
#TIFF19: பிரியங்கா சோப்ரா படத்தை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்!
டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) திரையிடப்பட்ட பிரியங்கா சோப்ராவின் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ (The sky is pink) படத்தை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கிய நிலையில் இருந்திருக்கிறார்கள்.
அந்தவகையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இதற்காக பிரியங்கா சோப்ரா, ஃபர்கான் அக்தர், சோனாலி போஸ் ஆகியோர் டொரன்டோ சென்றிருந்தனர்.
இந்தப் படத்தை பார்த்த சினிமா ப்ரியர்கள் ரொம்ப எமோசனாகி கண்கலங்கிய நிலையில் இருந்துள்ளனர். பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். இது குறித்து பிரியங்காவின் காதல் கணவர் நிக் ஜோனாஸ், 'வாழ்த்துகள் பிரியங்கா மற்றும் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ டீம். இது ஒரு அற்புதமான படைப்பு' என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.