மிஸ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இமானுவல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இதில் வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை மிஸ்கின் லண்டனில் இயக்கிவந்தார்.
லண்டனில் படப்பிடிப்பை நிறைவு செய்த 'துப்பறிவாளன் 2' டீம்! - மிஷ்கின்
லண்டனில் நடைப்பெற்று வந்த விஷாலின் ’துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசன்னா, கௌதமி, ரஹ்மான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். லண்டனில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தனது செல்லநாய் இறந்ததன் மர்மத்தை கண்டுபிடிக்குமாறு துப்பறிவாளனான தன்னை நாடிய சிறுவனுக்கு உதவ முற்படும் கணியன் பூங்குன்றன், அதன் பின்னணியில் இருக்கும் கேங்கும், அவர்களின் பித்தலாட்டங்களும் என விரியும் விதமாக அமைந்திருந்த துப்பறிவாளன் படம் ரசிகர்களுக்கு சிறந்த சீட் எட்ஜ் த்ரில்லராக புதிய அனுபவத்தை தந்தது. அதேபோல் இந்த படமும் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.