2017ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான டிடெக்டிவ் திரில்லர் படமான 'துப்பறிவாளன்' சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் பிரசன்னா, அனு இமானுவேல், வினய் ராய், பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
'துப்பறிவாளன் 2' படத்தின் அடுத்த அப்டேட் - துப்பறிவாளன் 2 அப்டேட்
விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 'துப்பறிவாளன் 2' படத்திலும் விஷால் கதாநாயகனாக நடிக்க இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். படத்தை நடிகர் விஷால் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
உதயநிதி நடிப்பில் 'சைக்கோ' என்ற படத்தை இயக்கி வந்த மிஷ்கின், தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும், இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாக மிஷ்கின் நடிக்கும் காட்சியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.