தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திருமணம் பற்றி மனம் திறந்த 'காஜல் அகர்வால்' - திருமணம் பற்றி மனம் திறக்கும் காஜல்

விரைவில் தன்னை திருமணக் கோலத்தில் பார்க்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

kajal-aggarwal

By

Published : Oct 28, 2019, 12:33 PM IST

பேரரசு இயக்கத்தில் பரத் நடித்திருந்த பழனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தொடர்ந்து சரோஜா, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல தெலுங்கு தனியார் வலைதள ஊடகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகை லக்‌ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கியிருந்தார்.

சகோதரியுடன் காஜல் அகர்வால்

அதில் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு இவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள், கணவர் எப்படி இருக்கவேண்டும் உள்ளிட்ட கேள்விகளை கேட்க முன்வைக்க, அதற்கு பதிலளிளத்த காஜல், 'கூடிய விரைவில் திருமணம் செய்ய நினைக்கிறேன். மிகவும் அமைதியான குணம் கொண்டிருக்க வேண்டும், முக்கியமாக என் மீது அதிக அக்கறையும், பயபக்தி நிறைந்தவராகவும் இருக்க வேண்டும்.

பக்தி பரவசத்தில் நடிகை காஜல் அகர்வால்

நான் மிகுந்த ஆன்மீக பக்தி கொண்ட நபர். எங்கு சென்றாலும் கூடவே ஒரு சிறிய சிவன் சிலையை கொண்டு செல்வேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய காஜல் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். காஜல் அடுத்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடுவார் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கிறது.

இதையும் படிங்க...

ஷெரின், ஷாக்‌ஷியுடன் தீபாவளி கொண்டாடிய சேரன்..!

ABOUT THE AUTHOR

...view details