இயக்குநர் ஹரிஷ்ராம் இயக்கத்தில் 'கானா' தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தும்பா. தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இப்படத்தில் பெண்புலி முக்கிய கதாபப்பாத்திரத்தில் நடித்துள்ளது. தும்பா படத்தில் அனிருத், விவேக் -மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசையமைத்துள்ளனர். படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தும்பா படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
வேட்டையாடும் புலி 'தும்பா' பட டிரைலர் - dharsan
'கானா' தர்ஷன் நடித்துள்ள 'தும்பா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். காமெடி கலந்த சாகச பயணத்துடன் வனவிலங்குகள் வசிக்கும் அடர்ந்த காட்டிற்குள் கதாநாயகன், நாயகி, தீனா ஆகியோர் பயணம் செய்கின்றனர். நாயகிக்கு புலியை பக்கத்தில் இருந்து புகைப்படம் எடுக்க ஆசை. அவரது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதையாக என கூறப்படுகிறது. காடுகளை காக்கும் விலங்குகளை காப்பது நமது கடமை என்ற சமூக கருத்தை சொல்ல தும்பா படம் முயற்சிக்கிறது. குழந்தைகளுக்கு பிடித்த படமாக உருவாகியுள்ள தும்பா பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவர காத்திருக்கிறது.