தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் மிகவும் அரிது. '80' கால சினிமாக்களில் பாம்பு, குரங்கு, யானை ஆகிய விலங்குகளை வைத்தே படம் வந்திருக்கும் நிலையில் மாறுதலாக, இக்காலக் கட்டத்திற்கு ஏற்ப காட்டில் வாழும் புலியை வைத்து முழு நீள படத்தினை இயக்கியுள்ளார் ஹரிஷ்.
சமீபத்தில் வெளியான 'கனா' படம் மூலம் திரைக்கு வந்த தர்ஷன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.