தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனுஷ் - ஜவஹர் கூட்டணியில் மூன்று கதாநாயகிகள்! - director mithran jawahar

தனுஷ் இதுவரை புதுப்பேட்டை, கொடி என இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார். ஆனால், மூன்று கதாநாயகிகளுடன் நடிக்கப்போவது இதுவே முதல்முறையாகும்.

three herion in d 44
three herion in d 44

By

Published : Jul 9, 2021, 3:52 PM IST

சென்னை:தனுஷ் - மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகவுள்ள ‘D44’ படத்தில் மூன்று கதாநாயகிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், 4ஆவது முறையாக தனுஷுடன் இணையவுள்ள படம் ‘D44’. தனுஷின் 44ஆவது படம் என்பதால் இப்படி அழைக்கப்படுகிறது.

தனுஷ் இதுவரை புதுப்பேட்டை, கொடி என இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார். ஆனால், மூன்று கதாநாயகிகளுடன் நடிக்கப்போவது இதுவே முதல்முறையாகும். நித்யா மேனன், ஹன்சிகா, ராஷி கண்ணா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். மாளவிகா மோகனன் - தனுஷ் ஆகியோர் இதன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையவுள்ளன.

இதையும் படிங்க:காஜல் அகர்வாலின் 'கோஸ்டி' படப்பிடிப்பு நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details