தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2022, 4:59 PM IST

Updated : Feb 3, 2022, 6:21 PM IST

ETV Bharat / sitara

'சாயம்' பட வெளியீடு; இயக்குநருக்கு மிரட்டல்!

சாதி எதிர்ப்பை மையமாககொண்டு உருவாகியுள்ள சாயம் படத்தை, தென்மாவட்டங்களில் திரையிடக் கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டதாக இயக்குநர் ஆண்டனி சாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'சாயம்' பட வெளியீடு; இயக்குநருக்கு மிரட்டல்!
'சாயம்' பட வெளியீடு; இயக்குநருக்கு மிரட்டல்!

ஒயிட் லேம்ப் புரொடக்ஷன் சார்பில் ஆண்டனி சாமி, எஸ்பி ராமநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சாயம்'. இந்தப் படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா - பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

மாணவர்களிடம் புகுத்தப்படும் சாதி உணர்வு

படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் புகுத்தப்படும் சாதி உணர்வு, அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் எனும் கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படம் குறித்தும், இந்தப் படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

படத்தின் ஹீரோ விஜய் விஷ்வா பேசுகையில், “இந்த ஏழு வருட போராட்டத்தை பற்றி இங்கே குறிப்பிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது இயக்குநரின் வலி என்பதால் வெளியே தெரிய வேண்டியதாகி விட்டது. இந்தப் படம் எந்த ஒரு சாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை.

சாதி பார்க்க வேண்டாம். குறிப்பாக படிக்கும் வயதில் மாணவர்கள் சாதி பற்றி நினைக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிற கருத்துதான் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது” என்றார்.

எதிர்பாராத திசையில் எதிர்ப்பு

படம் குறித்து இயக்குனர் ஆண்டனி சாமி பேசுகையில், “நூறு முறை இந்தப் படத்தை கைவிட்டு விடலாம் என நினைத்தேன். பின்னர் திரும்ப திரும்ப ஆரம்பித்து, இப்போது இந்த படத்தை ரிலீஸ்வரை கொண்டு வந்து விட்டோம். இந்த படத்திற்கான பிரச்சினைகளை சமாளிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்படவில்லை. ஆனால், எதிர்ப்புகளை அதிகம் சந்தித்து விட்டோம்.

இப்படியெல்லாம் கூட எதிர்ப்பு வருமா எனும் விதமாக, எதிர்பாராத திசையிலிருந்து எல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக இந்தப் படத்தை தென் மாவட்டங்களில் திரையிட வேண்டாம் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தென் மாவட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்பதால், தென் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியன் புகைப்படத்தை சில காட்சிகளின் பின்னணியில் இடம்பெறுவது போல செய்திருந்தோம்.

சென்சாரில் கூட, இந்தப் படத்தில் நாங்கள் பயன்படுத்தி இருந்த தலைவர்களின் புகைப்படங்களை எல்லாம் அவர்கள் உருவம் தெரியாதவாறு மறைக்கும்படி கூறினார்கள். கதைக்கும், காட்சிக்கும் தேவைப்பட்டது என்பதாலேயே அவர்களது படங்களை இடம்பெறச் செய்தோம்.

ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதால் வேறுவழியின்றி சென்சார் அலுவலர்கள் சொன்ன நிபந்தனைகளுக்கு உள்பட வேண்டியதாகிவிட்டது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எதற்காக அந்த தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன? குறிப்பிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன? என்பது ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்தால் நன்றாக இருக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர் வெளியீடு; மேடையில் கண்கலங்கிய விஷ்ணு விஷால்!

Last Updated : Feb 3, 2022, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details