கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் தமிழ்நாடு போட்டியில் பட்டம் பெற்றவர் மீரா மிதுன். இவர், ’தானா சேர்ந்த கூட்டம்’ , ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மீரா மிதுன் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
மிஸ் தமிழ்நாடு உயிருக்கு ஆபத்து!.. - மாடலிங்
சென்னை: மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற மீரா மிதுன் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தமிழ்நாடு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் மாடலிங் துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பெற்று சாதித்த முதல் தமிழ் பெண்மணி நான். இதனால் தமிழ் பெண்கள் மாடலிங் துறையில் சாதிக்க மிஸ் தமிழ்நாடு திவா 2019 என்ற பெயரில் அழகிப்போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தேன்.ஏற்கனவே மாடலிங் ஏஜென்ஸி நடத்தி வரும் அஜித் ரவி என்பவர் தொழில் போட்டி காரணமாகவும், தமிழ் பெண்கள் சாதிக்கக்கூடாது என்பதற்காகவும் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும்,தகாத வார்த்தைகள் பேசியும்வருகிறார்.
நான் இந்தப் போட்டியை நடத்தினால், தமிழ்ப் பெண்கள் சர்வதேச அளவில் சாதிக்க இது வழிவகை செய்யும். வருகிற ஜூன் 3ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த அழகி போட்டியில் தமிழ் பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் 14 பெண்களுக்கும் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என மிரட்டல் வருகிறது. இதனால் எனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.