‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் - ஹெச். வினோத் - போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்தக் குழுவுடன் கலை இயக்குநர் தோட்டா தரணி இணைந்துள்ளார்.
வேற லெவலில் இருக்கப் போகிறது ‘வலிமை’ - கலை இயக்குநர் இவர்தான்? - valimai first look
தேசிய விருதுபெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணி, அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளார்.
valimai
'நாயகன்', 'இந்தியன்' ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றவர் தோட்டா தரணி. அவர் இந்தப் படத்தில் இணைந்திருப்பதன் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘வலிமை’ பட செட்டுகள் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் அஜித் மீண்டும் இளமையான தோற்றத்தில் நடிப்பதால், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.