ஒரே பகுதியில் வசிக்கும் 5 நண்பர்களை, அந்த பகுதியின் தாதா ஒரு பிரச்னையில் பொதுமக்கள் முன்னிலையில் தோப்புக்கரணம் போட வைக்கிறார். அதனால் அவமானம் அடைந்த நண்பர்கள், தாதாவை பழிவாங்க துடிக்கிறனர். இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தனர்? தோப்புக்கரணம் போட வைத்தனரா? இல்லை தாதா அவர்களை என்ன செய்தான்? என்பதே படத்தின் திரைக்கதையாகும். ஐந்து கல்லூரி மாணவர்களே படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் தமிழ்நாடு, பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 500 கல்லூரி மாணவர்களை வரவழைத்து அதில் 5 மாணவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர்.
கோகன், அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் மிஸ்டர் இந்தியாவாக வலம் வந்த "ஸ்டீவ்" நடித்திருக்கிறார். படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை கென்னடி ப்ரியன் எழுத, பரணி செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். நிகரன் பாடல்கள் எழுத, ஷரவன் இசையமைக்கிறார்.