தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உலகக்கோப்பையை திருடுவதுதான் எங்க குறிக்கோள் : 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' சுதர் - கிரிகெட் உலககோப்பை

'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' படம் குறித்து இயக்குநர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

parthiban

By

Published : Sep 17, 2019, 7:48 PM IST

இயக்குநர் சுதர் இயக்கத்தில் நடிகர் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. இப்படத்தை டூ மூவி ஃபப்ஸ் (Two Movie Buff's) நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது

படம் குறித்து சுதர் கூறுகையில், ”கிரிக்கெட் உலகக்கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனைதான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோதான் இருக்கும். நடிகர்கள் மட்டும்தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும்.

கலை இயக்கத்தை பற்றி சொல்லியாக வேண்டும், எங்கள் கலை இயக்குநர் மிக சிறப்பாக தன் பங்கை அளித்துள்ளார். மியூசியம் செட் ஒன்று படத்தில் உள்ளது. அது செட் என்றே தெரியாத வகையில் அத்தனை வெண்கல சிற்பங்களை கொண்டு துல்லியமாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details