இயக்குநர் சுதர் இயக்கத்தில் நடிகர் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்'. இப்படத்தை டூ மூவி ஃபப்ஸ் (Two Movie Buff's) நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.
'திட்டம் போட்டு திருடற கூட்டம்' - ஜாலியான படம்தான்... குடும்பமா வாங்க! - கயல்
சென்னை: ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் திருட்டை ஊக்குவிக்கும் படமல்ல, குடும்பமாக வந்து பாருங்கள் என்று படத்தின் இயக்குநர் சுதர் கூறியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் பார்த்திபன், கயல் சந்திரன், படத்தின் இயக்குநர் சுதர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது சுதர் பேசுகையில், ‘இது திருட்டை ஊக்குவிக்கும் படமல்ல. ஒரு ஜாலியான படம். கிரிக்கெட் கப்பை திருடுவது போன்ற கதை அமைத்துள்ளோம். கிரிக்கெட் கோப்பை தங்கத்தால் உருவானது. அதை ஒரு குரூப் திருட முயற்சி செய்கிறது. எதுக்காக அந்த கப்பை திருடுகிறார்கள் அதற்கு என்ன வேல்யூ இருக்கிறது என்பதை கூறும் படம்தான் இது. ஜாலியான படம் குடும்பத்தோடு, குழந்தைகளோடு வாருங்கள்’ என்றார்.