நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள, 'திட்டம் இரண்டு' படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகாமல் இருக்கும் இப்படம் இறுதியாகச் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் - latest kollywood news
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திட்டம் இரண்டு' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
இதுதவிர நடிகை ஐஸ்வர்யா மூன்று தெலுங்கு படங்கள், பூமிகா, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சாதனை படைத்த சூர்யா 40 ஃபர்ஸ்ட் லுக் வீடியோ