தமிழ் சினிமா கண்ட தனித்துவமான இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். பிரமிக்கவைக்கும் கதை முதல் சர்ச்சைக்குரிய கதை என அவர் கை வைக்காத டாபிக்கே இல்லை. நடிகர்களைத் தாண்டி செல்வராகவன் படம் என்பதற்காகவே திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் ஏராளம். கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ திரைப்படம் வெளியானது. தற்போது அவர் அடுத்ததாக ‘புதுப்பேட்டை 2’ படத்தின் பணிகளை ஆரம்பித்துள்ளார்.
'மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; கடவுள் யாரையும் குறைத்து படைப்பதில்லை' - இயக்குநர் செல்வராகவன் - இயக்குநர் செல்வராகவன்
இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
selvaragavan
இவர் அவ்வப்போது சமூக சார்ந்த கருத்துகளையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் ட்விட்டரில், "இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்து படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்போதும் நினைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அன்று கேலி செய்த உலகம் இன்று மரியாதையாக பார்க்கிறது - 'ஜீனியஸ்' செல்வராகவன்