தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அர்ஜூன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் கிரைம் த்ரில்லர் படம்! - ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அர்ஜூன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் கிரைம் த்ரில்லர் படம்!
அர்ஜூன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் கிரைம் த்ரில்லர் படம்!

By

Published : Mar 4, 2022, 10:12 PM IST

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'தீயவர் குலைகள் நடுங்க' என்று பெயரிடப்பட்டுள்ளது. தினேஷ் லெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதையாக உருவாகியுள்ளது. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ, அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான க்ரைம் - த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரம் மையக் கதாபாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது.

எந்தவித கதாபாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார். ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக 'தீயவர் குலைகள் நடுங்க' திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் தொழில் நுட்பக்குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), கணேஷ் (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர். அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ராம்குமார் சிவாஜி கணேசன், ஜிகே.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, GS ARTS சார்பில் தயாரிப்பாளர் G.அருள் குமார் தயாரிக்கிறார்.

இதையும் படிங்க:கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களைக் கைப்பற்றுவதா? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details