தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளங்கள் நோக்கிப் படையெடுத்துக் கிளம்பியுள்ளன.
இதனையடுத்து தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருக்கும் எனத் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.