தமிழ்நாட்டில் இரண்டாவது கட்ட கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் பெரிய படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாகி வருகிறது.
இதனாலேயே ஒன்றிரண்டு இருந்த ஓடிடி தளங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான ஓடிடி தளங்களின் வருகையால் சினிமா வியாபாரத்தை இனி ஓடிடி தளங்கள்தான் முடிவு செய்யும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தயாரிப்பாளர்களும் தங்களது கடன் பிரச்னை, வட்டி கட்ட முடியாதது காரணமாக ஓடிடி தளங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது, "திரையரங்குகளுக்கு எப்போதுமே அழிவில்லை. தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்தாலும் திரையரங்குகள் அதற்குத் தகுந்தாற் போல் தன்னை தகவமைத்துக்கொள்ளும்.