தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நன்றி தெரிவித்த ‘தேன்’ பட நடிகை அபர்ணதி - actress abarnathi news in Tamil

51ஆவது பனோரமா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தேன்’ பட நடிகை அபர்ணதி அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை அபர்ணதி
நடிகை அபர்ணதி

By

Published : Dec 23, 2020, 12:29 PM IST

நடிகர் தருண்குமார், நடிகை அபர்ணதி நடிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம் ‘தேன்’. இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும், 51ஆவது பனோரமா சர்வதேசத் திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகவும் இப்படம் தேர்வாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த கதாநாயகி அபர்ணதி அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ' தேன்' திரைப்படத்திற்குத் தாங்கள் அனைவரும் அளித்துவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'தேன்' திரைப்படம் குறித்து தங்களின் நேர்மறை விமர்சனங்களும் செய்திகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில், 'தேன்' திரைப்படம் 51ஆவது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகத் தேர்வாகியுள்ளது.

நடிகை அபர்ணதி

இதற்காக, இயக்குநர் ஸ்ரீ கணேஷ் விநாயக், ஏபி புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் அம்பலவானன்.பி, பிரேமா.பி, நடிகர் தருண் குமார், குழந்தை நட்சத்திரம் அனுஸ்ரீ, துணை நடிகர்கள் பவா லக்‌ஷ்மணா, அருள் தாஸ், கயல் தேவராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், வசனகர்த்தா ராசி தங்கதுரை, கலை இயக்குநர் மாயபாண்டி ஆகியோருக்கும் நன்றி கூறுகிறேன். படத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறந்த பங்களிப்பையும், ஆதரவையும் நினைவு கூர்கிறேன்.

நடிகை அபர்ணதி

உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் 'தேன்' இன்று தித்திக்கிறது. தயாரிப்பாளர், விநியோகிஸ்தரான ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் சாருக்கு தனிச்சிறப்பான நன்றிகள். அவர் படத்தை வெளியிட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். இதேபோல், வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் எனது அடுத்த திரைப்படமான 'ஜெயில்' படத்திற்கும் தங்களின் ஒத்துழைப்பைத் தொடர வேண்டும் என வேண்டுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக் கால நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...பாலிவுட்டில் அறிமுகமாகும் அமலாபால்!

ABOUT THE AUTHOR

...view details