அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
'சன்கி' மங்கி அடங்கோ... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஷாருக் - அட்லி! - சன்கி
அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் பெயர் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூலைத் தாண்டி கலவையான விமர்சனங்களோடு ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனையடுத்து அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிரடி கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்திற்கு சன்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. '#Sanki' என்ற ஹேஷ்டேக் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.