ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சூடைட் ஸ்குவாட்’ படத்தின் இரண்டாம் பாக ஸ்கிரிப்டை படித்த நடிகர் ஜோயல் கின்னாமேன், அது மிகவும் நகைச்சுவையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
பக்கத்துக்கு பக்கம் சிரிப்பு: ‘சூசைட் ஸ்குவாட்’ ஸ்கிரிப்ட் குறித்து ஜோயல் கின்னாமேன் - சூடைட் ஸ்குவாட்
‘சூடைட் ஸ்குவாட்’ படத்தின் இரண்டாம் பாக ஸ்கிரிப்டை படித்து விழுந்து விழுந்து சிரித்ததாக நடிகர் ஜோயல் கின்னாமேன் தெரிவித்துள்ளார்.

சூசைட் ஸ்குவாட் இரண்டாம் பாகத்தில் டிசி காமிக்ஸின் ரிக் ஃப்ளாக் கதாபாத்திரத்தில் ஜோயல் கின்னாமேன் நடிக்கிறார். இந்தப் படம் குறித்து ஜோயல், நான் முதன்முதலாக நடிக்கும் சரியான காமெடி திரைப்படம் இதுதான் என கருதுகிறேன். ஸ்கிரிப்டை படிக்கும்போது விழுந்து விழுந்து சிரித்தேன். ஜேம்ஸ் கன் இப்படியான கதை சொல்லல் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். சில கதாபாத்திரங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சூசைட் ஸ்குவாட் 2 படத்தில் கின்னாமேனுடன் மர்காட் ராபி, இட்ரிஸ் எல்பா, பீட்டர் கபால்டி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.