'ஆரண்ய காண்டம்' திரைப்படம் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். கடல், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, ஜோக்கர், வஞ்சகர் உலகம், பேட்ட உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், 'ஜோக்கர்' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சமூக அவலங்களை மக்களுக்கு, சாட்டையடி கொடுக்கும் வண்ணம் இவர் நடித்த நடிப்பு 'ஜோக்கர்' படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.
தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரமாகவே தன்னை அடையாளப்படுத்தி திரையில் தோன்றி நடிக்கும் குரு சோமசுந்தரம், மாறுபட்ட நடிப்பால் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்துள்ளார்.
தற்போது இவர், 'டாப்லெஸ்' என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். தினேஷ் மோகன் இயக்கும் இந்த வெப் சீரிஸை சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில், ஹரீஷ் உத்தமன், அருண் அலெக்சாண்டர், கோகுல் ஆனந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.