தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இவரதான் கல்யாணம் பண்ணிப்பேன்; மனம்திறந்த டாப்ஸி? - vicky kaushal

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டாப்ஸி, இந்த நடிகரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என ஒருவரை சுட்டியிருக்கிறார்.

tapsee

By

Published : May 15, 2019, 2:37 PM IST

தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும், டாப்ஸிக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. ஆனால், பாலிவுட் அவர் நடிப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. பிங்க், நாம் ஷபானா, மன்மர்சியான் என தனது அதீத நடிப்பை வெளிப்படுத்தி, பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகிவிட்டார். மன்மர்சியான் படத்தில் விக்கி கவுசல் உடன் அவர் இணைந்து நடித்தது பலராலும் பாராட்டப்பட்டது. இவர்களின் ஜோடிப் பொருத்தம் அருமை என பாலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கத் தொடங்கியது. இந்நிலையில், கல்யாணம் பண்ணிக்க விக்கி கவுசல் சரியான ஆள் என டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

டாப்சி-விக்கி கவுசல்

மன்மர்சியான் படத்தில் நடித்த இந்த ஜோடியை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. இதில் விளையாட்டாக கேட்கப்பட்ட சில கேள்விகளில், யாரை திருமணம் செய்வீர்கள்? என டாப்ஸியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விக்கி கவுசலை கைகாட்டியிருக்கிறார் டாப்ஸி. தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாத டாப்ஸி தற்போது பாலிவுட்டில் 4 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கிறார். பிங்க் படத்துக்கு அவருக்கு ஃபிலிம்பேர் விருது வழங்கப்படாதது அந்த நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details