சென்னை:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை (ஜன. 13) திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது.
இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டதை கண்டறிந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களிடம் விசாரித்தனர்.