தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஷுவல் எஃபெக்ட்ஸ்காக மூன்று விருதுகளை அள்ளிய 'தி லயன் கிங்' - தி லயன் கிங் படத்துக்கு விருது

வாஷிங்டன்: அனிமேஷன் திரைப்படமான "தி லயன் கிங்" விஷுவல் எஃபெக்ட்ஸ் சமூக விருது நிகழ்ச்சியில் 3 விருதுகளை அள்ளியது.

The Lion King wins 3 titles at visual effects society
The Lion king movie

By

Published : Jan 31, 2020, 7:58 AM IST

அனிமேஷன் திரைப்படமாக வெளியாகி தத்ரூபமான காட்சிகளால் விலங்குகள் வாழும் காட்டுக்குள் நம்மை அழைத்துச் சென்ற "தி லயன் கிங்" திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக மூன்று விருதுகளை வென்றுள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. இதையடுத்து, கேளிக்கை துறையில் பணியாற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சமூகம் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் மூன்று விருதை இந்தப் படம் தட்டிச்சென்றுள்ளது.

இதனை படத்தயாரிப்பு நிறுவனமாக டிஸ்னி ஸ்டுடியோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஃபோட்டோ ரியல் ஃபியூச்சர், ஃபோட்டோ ரியல் ஃபியூச்சரில் உருவாக்கப்பட்ட சிறந்த சூழல், சிறந்த விர்ஷுவல் ஒளிப்பதிவு என விஷுவல் எஃபெக்ட்ஸ் சமூகம் சார்பில் வழங்கப்பட்ட மூன்று விருதுகளை பெற்றிருக்கும் "தி லயன் கிங்" விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி ஐரிஷ்மேன், டாய் ஸ்டாரி 4, தி மண்டலோரியன் ஆகிய படங்களும் இந்த விருது பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் தி லயன் கிங், தி ஐரிஷ்மேன் ஆகிய படங்கள் ஒரே பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details