தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ராபர்ட் பேட்டின்சன் - உற்சாகத்தில் ரசிகர்கள்! - Oscar news

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவிற்கு பல்வேறு திரைப்படங்களும், நடிகர், நடிகையரும் பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில், சிறந்த முன்னணி நடிகருக்கானப் பிரிவில் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Robert Pattinson

By

Published : Oct 8, 2019, 8:36 PM IST

ட்வைலைட் சீரிஸ் மூலம் உலக அளவில் இளைஞர்கள், சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் (Robert Pattinson). தனது சிறுவயது முதலே பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், தற்போது லைட் ஹவுஸ் திரைப்படத்திற்காக சிறந்த முன்னணி நடிகருக்கானப் பிரிவில் ஆஸ்கர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Robert Pattinson in The Lighthouse

தி லைட் ஹவுஸ் (The Lighthouse) திரைப்படத்தில் அட் எட்டெர்னிடி கேட், ப்ளேண்டூன் போன்ற படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகரான வில்லியம் டஃபோவும் (Willem Dafoe) இவருடன் இணைந்து நடித்துள்ளார். தனிமையின் பிடியில் உழலும், கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்கும் இரு நபர்கள், மோசமான கனவுகளால் மெதுவாய் நிலையிழந்து, கட்டற்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவதைப் பற்றி இப்படத்தின் கதை பேசுகிறது.

அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம், ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது. தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று பாராட்டுகளைக் குவித்துவருவதால் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

அதிக ஏலம் போன ஹாலிவுட் படத்தின் பொருட்கள்...!

ABOUT THE AUTHOR

...view details