மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டை பெற்ற படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜோ பேபி இயக்கிய இப்படத்தில், சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். 100 நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய இப்படத்தில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பதும், இந்திய பெண்களின் வாழ்வியல் முறையும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
தமிழில் ரீமேக்காகும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'! - தி கிரேட் இந்தியன் கிச்சன்
சென்னை: மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழில் ரீமேக்காகிறது.

kannan
தற்போது இந்த படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை இயக்குநர் ஆர்.கண்ணன் கைப்பற்றியுள்ளார். இதில் நடிப்பதற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதுகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்குகிறது.
இதையும் படிங்க: சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'யாமா'