தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்? - செல்வராகவன்

சூர்யாவின் திரைப்படம் முதன்முதலாக தென் கொரியாவில் வெளியாகும் தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெறவுள்ளது.

ngk surya

By

Published : May 26, 2019, 5:10 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’. இதில் பொன்வண்ணன், பால சிங், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்றிருக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற மே 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் திரைக்கு வரும் முன்பே ‘என்.ஜி.கே’ சில பெருமைகளை பெற்றிருக்கிறது. இதுவரை எந்த தமிழ்த் திரைப்படங்களும் தென் கொரியாவில் வெளியானதில்லை. ‘என்.ஜி.கே’ முதன்முதலாக தென் கொரியாவில் வெளியாகவுள்ளது.

என்.ஜி.கே சூர்யா

அதேபோல் இந்தியாவிலேயே பெரிய கட்-அவுட் சூர்யாவுக்கு வைக்கப்பட இருக்கிறது. திருத்தணியில் 215 அடிக்கு கட்-அவுட் வைக்க அவரது ரசிகர்கள் முடிவு செய்திருக்கின்றனர். இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. மே 31ஆம் தேதியை எதிர்நோக்கி சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details