தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ”ஆண்கள் ஜாக்கிரதை”

"ஆண்கள் ஜாக்கிரதை" திரைப்படத்தில் 2 ஆயிரம் முதலைகளை கொண்டு படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாக, இயக்குநர் முத்து மனோகர் கூறியுள்ளார்.

ஆண்கள் ஜாக்கிரதை

By

Published : Jul 5, 2019, 7:08 PM IST

Updated : Jul 5, 2019, 7:38 PM IST

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் “ஆண்கள் ஜாக்கிரதை". முத்து மனோகர் இயக்கியுள்ள இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் முத்து மனோகரன் கூறுகையில், "இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம், பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கரு. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும் தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.

2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம். ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2 ஆயிரம் முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து படப்பிடிப்பை நடத்தினோம் . குறிப்பாக, முதலைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்."எனக் கூறினார்.

Last Updated : Jul 5, 2019, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details