தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாலிவுட்டில் கால்பதித்த 'பில்லா' பட இயக்குநர் - பில்லா

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் உண்மைக்கதையை இயக்குநர் விஷ்ணுவர்தன் திரைப்படமாக இயக்கவுள்ளார்.

Vishnuvardhan

By

Published : May 8, 2019, 9:38 AM IST

1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர் வரலாற்றில் சிறப்புமிக்கது. இப்போரில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த விக்ரம் பத்ரா பல வியப்புக்குரிய விஷயங்களைச் செய்தவர். கார்கில் போரின்போதே இவர் வீர மரணம் அடைந்தார்.

இதனையடுத்து கார்கில் போரை மையமாக வைத்து எல்.ஓ.சி. கார்கில் படம் 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் விக்ரம் பத்ராவின் உண்மைக் கதையை மட்டும் தனியாகப் படமாக்கவுள்ளார். இதற்காக விஷ்ணுவர்தன் நீண்டகாலாமாக ஆய்வில் இருந்தாக கூறப்படுகிறது.

'ஷெர்ஷா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 7) தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details