தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரையரங்குகளில் மட்டும்தான் திரையிடுவோம்: பணிந்தது ஈஸ்வரன் படக்குழு - திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் ஈஸ்வரன்

சிம்புவின் நடப்பில் திரைக்கு வரவுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை திரையரங்குகளில் மட்டுமே திரையிடுவோம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The film crew has said that Eeswaran will be released in theaters only
The film crew has said that Eeswaran will be released in theaters only

By

Published : Jan 12, 2021, 12:57 PM IST

சென்னை:சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜன. 14) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் அதே சமயத்தில் வெளிநாடுகளில் ஓடிடியில் திரைப்படம் வெளியிடப்பட்டும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் சிம்புவின் ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் வெளியிடமாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கடிதம்

இதனையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் தரப்பு திரைப்படம் வெளியீடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஈஸ்வரன் படத்தை தற்போது திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவோம். இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிடுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இது என்னடா... ஈஸ்வரன் படத்துக்கு வந்த சோதனை...!

ABOUT THE AUTHOR

...view details