'தரமணி' நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் 'ராக்கி' படத்தில் நடித்துவருகின்றனர். இதனை 'சாணிக்காயிதம்' படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இவர் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருதை வென்ற 'ஆரண்ய காண்டம்' படத்தில் உதவி இயக்குநராகவும், 'இறுதிச்சுற்று' படத்தில் டயலாக் போர்ஷனை எழுதியும் பணியாற்றியுள்ளார்.
'ராக்கி' திரைப்படத்தை 'ரெளடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.