ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் உய்யாலாவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, சைரா நரசிம்மா ரெட்டி எனும் படமாக உருவாக்கப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.
பிரிட்டீஷ் படையை தோற்கடிக்க மெகா ஸ்டார் சைரா நரசிம்ம ரெட்டி பிரம்மாண்ட டீசர் - தமன்னா
மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
இப்படத்தை நடிகர் ராம் சரண் தயாரித்து வருகிறார். இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
பிரிட்டீஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த புரட்சி பற்றிய கதையே சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பின் நடித்து வருவதால், அவரது ரசிகர் இப்படத்தை பெரும் எதிர்பார்த்து இருகின்றனர். இப்படம் அக்டோபர் 2ஆம் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.