சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி தர்பார் நடத்திவந்தவர் நடிகர் செந்தில். நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து, இவர் நடத்திய காமெடி கலாட்டாக்கள் காலத்தால் அழியாதவை.
குணச்சித்திர வேடங்கள் உள்பட பல்வேறு வேடங்களில் நடித்துவிட்ட செந்தில், தற்போது வரை கதாநாயகனாக மட்டும் நடித்ததில்லை.
டப்பிங் பணிகளை முடித்த செந்தில்
இந்நிலையில் 'ஒரு கிடாரியின் கருணை மனு' திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா சமீபத்தில் இயக்கியுள்ள படத்தில், நடிகர் செந்தில் நாயகனாக நடித்துள்ளார். செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ள இந்தப் படத்தினை, சமீரா பரத் ராம் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் கதாநாயகனாக நடித்துள்ள செந்தில், தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ஃபர்ஸ்ட்லுக், தலைப்பு ஆகியவை அறிவிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:பிக்பாஸ் 5: ஒரு வேள இருக்குமோ... ட்ரெண்ட் ஆகும் ஜி.பி. முத்து