தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: 15 ஊழியர்களிடம் விசாரணை

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்த விவகாரத்தில் 15 ஊழியர்களிடம் மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

the-central-bureau-of-investigation-is-investigating-the-15-employees-involved-in-the-accident-in-the-indian-2
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: 15 ஊழியர்களிடம் விசாரணை

By

Published : Mar 16, 2020, 2:24 PM IST

சென்னையை அடுத்த நசரத்பேட்டை ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடந்த 19ஆம் தேதி இரவு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் கடந்த 27ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார்.

பின்னர் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி, 3 ஆம் தேதி விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 4ஆம் தேதி லைகா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகள் 2 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் விபத்து நடைபெற்ற அன்று படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அரங்கு அமைத்த ஊழியர்கள் உட்பட சுமார் 15 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க:

'அந்த கிரேன் என்மேல் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'- ஷங்கர்

For All Latest Updates

TAGGED:

Accident

ABOUT THE AUTHOR

...view details