முகக்கவசம் அணிந்துகொள்வது, தகுந்த இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது போன்ற விஷயங்கள் இன்று மட்டும் நடைபெறுவதில்லை. சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதேபோன்று ஒரு நோய்த்தொற்றைச் சந்தித்திருக்கிறது.
'இன்ப்ளுயன்சா வைரஸ்' (Influenza Virus) என்னும் நோய்த் தொற்றால் அப்போது மனிதர்கள் மாண்டனர். இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்களிடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
ஒருவேளை அதேபோன்ற மனநிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பது குறித்து 'தி புக் ஆஃப் ஏனோக்' (The Book of Enoch) என்ற படம் உருவாகவுள்ளது.
'ஹான்ட் ஆஃப் காட்' புரொடக்ஷன்ஸ் சார்பில் ராபின் சாமுவேல் தயாரிக்கும் இப்படத்தை வெயிலோன் இயக்குகிறார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். சென்னையில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு திருத்தணி, வேலூர், பெங்களூரு போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: பிக்பாசில் வெடித்தது மோதல் - இமான் அண்ணாச்சி தான் காரணமா?