இயக்குநர் மேட் ரீவ்ஸ் இயக்கத்தில், ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகிவரும் 'த பேட் மேன்' திரைப்படத்தை எதிர்பார்த்து உலகம் முழுவதுமுள்ள பேட்மேன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களை மேட் ரீவ்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பேட் மேனின் ப்ரத்யேக வாகனமான பேட் மொபைலின், வேறு வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை மேட் ரீவிஸ் தற்போது வெளியிட்டுள்ளார்.
’த பேட் மேன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் பேட் மொபைல் மட்டுமல்லாது, படத்தின் கதாநாயகன் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் உடையில் உள்ள புகைப்படத்தையும் மேட் ரீவ்ஸ் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை, படத்தின் க்ளாப் போர்ட் புகைப்படத்துடன் மேட் ரீவ்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
’த பேட் மேன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் பிரபல பேட்மேன் தொடரின் மீள் உருவாக்கமான இந்தத் திரைப்படம் 'டார்க் நைட்' திரைப்படத்தின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டும், பல வில்லன்களைக் கொண்ட கதையாகவும் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது.
ராபர்ட் பேட்டின்சனோடு, ஜோயி க்ரேவிட்ஸ் பேட் உமனாகவும் பால் டேனோ ரிட்லர் கதாபாத்திரத்திலும் படத்தில் தோன்றவுள்ளனர். இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:களமிறங்கிவிட்டார் த பேட்மேன்!