திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் தங்களது அசாத்திய நடிப்பு கிறமையை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் (SAG) ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது கடந்த ஞாயிற்று கிழமை வழங்கப்பட்டது.
இதில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு சிறந்து துணை நடிகர் விருது கிடைத்தது. அதே போல் அவரது முன்னாள் மனைவியும், நடிகையுமான ஜெனிபர் அனிஸ்டனுக்கு தி மார்னிங் ஷோ என்ற தொடரில் நடித்தற்காக சிறந்த நடிகை விருது கிடைத்தது.
இதனை வாங்க வந்த இந்த முன்னாள் ஜோடிகள் அங்கு ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.