இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள லீலா விடுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை முதல் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடிவருகின்றனர்.
இந்த நிலையில், ’மாஸ்டர்’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியானது. அதில், விஷ்ணு வரிகளில் சிபி வினித் பாடியுள்ள பாடலுக்கு ’தருதல கதறுனா’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள், கடுமையாக விமர்சனம் செய்து ட்விட்டரில் கலாய்த்தனர்.