கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இளமைத் துள்ளலான பழைய ரஜினியை கண்முன் கொண்டு வந்து காட்டினார்.
இப்படத்தினைத் தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். தர்பார் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது.