சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டினார். கோபத்துடன் தனது வெளிப்படையான கருத்துக்களையும் முன் வைத்தார். எப்போதும் அமைதியாக கடந்து செல்லும் சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவிற்கு எதிராக அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் கடுமையாக விமர்சித்து பேசினர்.
கமலுக்கு சூர்யா எழுதிய கடிதம்! - எதிர்வினை
சென்னை: புதிய கல்விக்கொள்கை தொடர்பான தன் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சூர்யாவிற்கு ஆதரவாக கமல்ஹாசன், நாஞ்சில் சம்பத், அண்புமணி ராமதாஸ், சீமான், இயக்குநர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது கருத்திற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், "கல்வி கொள்கை கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மய்யம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.