பழம்பெரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு, ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும், எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிவேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
'எஸ்.பி.பிக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி' - நடிகர் விவேக் - நடிகர் விவேக் பிரார்த்தனை
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைய வேண்டி, கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவருக்கும் நடிகர் விவேக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே, கரோனா தொற்றில் இருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைய வேண்டி, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஜீவி பிரகாஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விவேக், சேரன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அவரவர் வீடுகளில் இருந்தபடியே எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்க விட்டு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, எஸ்.பி.பிக்காக பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என, நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இளையராஜா இசையில் 1990ஆம் ஆண்டு வெளியான கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற "மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ" என்ற பாடலை தனது பியானோவில் வாசித்து எஸ்.பி.பிக்காக விவேக் பிரார்த்தனை செய்தார்.