தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாயகனாக அறிமுகமாகும் தங்கர்பச்சானின் மகன் - சேரன்

இயக்குநர் தங்கர்பச்சான் தனது மகனை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.

Thangarbachchan

By

Published : Jul 19, 2019, 10:49 PM IST

'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'களவாடியப் பொழுதுகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான். பார்த்திபன், சத்யராஜ், சேரன், பிரபுதேவா போன்ற நாயகர்களை மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர், தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்ய உள்ளார். கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புகளை உருவாக்கிய தங்கர்பச்சான் இப்படத்தை சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட நகைச்சுவைப் படமாக இயக்குகிறார்.

புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். மேலும் இவர்களுடன் முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

சைதை துரைசாமி

இப்படத்தை பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முன்னாள் சென்னை பெருநகர மேயர் மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். முழு படப்பிடிப்பும் சென்னையிலேயே தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details