அறிமுக இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் அபிஷேக் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டகன்'. அபிஷேக் உடன் நடிகைகள் மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் கதநாயகன் அபிஷேக் பேசுகையில், ’முதன் முறையாக ஹீரோவாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளேன். இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மற்ற படங்களில் நான் நடிக்கும்பொழுது எனக்கு ஆதரவு கொடுத்தீர்கள் அதே போன்று கதாநாயகனாக நடிக்கும்இந்த படத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்றார்.