கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான படம் 'பேட்ட'. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படத்தில் சிங்காரம் எனும் வில்லத்தனமாக கேரக்டரில் கலக்கியிருந்தார் பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
'பேட்ட' சிங்காரத்துக்கு ஜோடியாகும் தமன்னா..! - ரஜினி காந்த்
பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த புதிய படத்தை நவாசுதின் சித்திக்கின் சகோதர் சமாஸ் சித்திக் இயக்குகிறார். இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார்.
இது குறித்து தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறது. இதில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பாலிவுட் படம் ஒன்றில் மல்டிலேயர் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு, இந்த கேரக்டருக்கு சரியான தேர்வு தமன்னா மட்டும்தான் என்று நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளார்.