தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'வக்கீல் சாப்' படத்தில் நடித்துவருகிறார். பாலிவுட்டில் 'பிங்க்' மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பிலும், தமிழில் 'நேர்கொண்ட பார்வை' அஜித் நடிப்பிலும் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் அவருக்கு 26 ஆவது படமாகும்.
பெண்களின் பெருமையை பாடும் 'வக்கீல் சாப்' பவன் கல்யாணின் 'மகுவா... மகுவா' ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் - நேர்கொண்ட பார்வை
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 'வக்கீல் சாப்' படத்தின் மகுவா... மகுவா ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராகை படக்குழு வெளியிட்டுள்ளது.
'வக்கீல் சாப்' படத்தில் பவன் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீராம் வேணு இயக்கும் இப்படத்தை தில் ராஜூ, போனி கபூர் ஆகியோர் இனைந்து தயாரிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படம் வெளியாகிறது.
மகளிர் தினமான இன்று இப்படத்தின் 'மகுவா... மகுவா' பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெண்களை பற்றி அமைந்துள்ள இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே தெலுங்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.