தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் 65ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
தளபதி 65 படப் பூஜை வீடியோ வெளியீடு - thalapathy vijay
சென்னை: தளபதி 65 படப் பூஜையின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தளபதி 65
இப்படத்தின் பூஜை நேற்று(மார்ச் 31) சென்னையில் நடைபெற்றது. அதில் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படக்குழு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தளபதி 65 படப் பூஜையின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். விரைவில் படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.