நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தை இயக்கிய நெல்சன் அடுத்தாக நடிகர் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
'தளபதி 65' அப்டேட்: ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடக்கம்! - தளபதி 65 அப்டேட்
'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது. அதில் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது வெளியான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி வாக்கு செலுத்திவிட்டு அன்று இரவே விஜய் தளபதி 65 படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் நெல்சனுடன் விஜய் இருக்கும் புகைபடத்துடன் சன்பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.