தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், அமிர்தா, வர்ஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். என்னதான் விஜய் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தீர்த்தாலும், ஒரு முறை மட்டுமே படத்தைப் பார்க்க முடியும் என்று கோலிவுட் ரசிகர்கள் கூறினர்.
இந்த நிலையில் பிகில் திரைப்படம் வெளியாகி இந்த வாரம் 100ஆவது நாள் ஆகப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "பிகில் திரைப்படம் தளபதி விஜய் ரசிகர்கள் இல்லாமல், 100ஆவது நாளை எட்டியிருக்க முடியாது. அதற்காக அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் #Bigil100days என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.